1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (13:18 IST)

ட்ரோலாகும் நடிகை அமலாபாலின் புகைப்படம்!

நடிகை அமலா பால் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது அவர் இணையத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று வடிவேலுவின் புகைப்படத்தோடு சேர்த்து வைத்து ட்ரோல் ஆகி வருகிறது.