வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (10:40 IST)

நியுசிலாந்துக்கு எதிரான டி 20 தொடர்… ஐபிஎல் ஹீரோக்களுக்கு வாய்ப்பு!

நவம்பர் 17 ஆம் தேதி தொடங்க உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின்னர் புதிய கேப்டன் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக ரோஹித் ஷர்மாதான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது. ஆனால் உலகக்கோப்பைக்குப் பின்னர் நியுசிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் டி 20 தொடரில் கோலி, ரோஹித் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் இந்த டி 20 தொடரில் ஐபிஎல் போட்டிகள் மூலம் கவனம் ஈர்த்த ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.