ரஸலுக்கு பவர் கிடைத்தது இந்த முத்தத்தால் தானா? வைரலாகும் வீடியோ

Last Modified புதன், 24 ஏப்ரல் 2019 (19:02 IST)
இந்த ஐபிஎல் சீசனில் ஒரு பக்கம் தல தோனி அதிரடி மன்னன் என்றால் இன்னொரு பக்கம் கொல்கத்தா அணியில் ரஸல் இன்னொரு அதிரடி வீரராக உள்ளார். இவர் களத்தில் இறங்கிவிட்டாலே பவுண்டரியும், சிக்சரும் பறக்கும். கொல்கத்தாவின் பல வெற்றிக்கு காரணமே இவரது அதிரடி ஆட்டம் தான்
ரஸலுக்கு இந்த அளவுக்கு பவர் எப்படி கிடைத்தது என பலர் யோசித்து வரும் நிலையில் தற்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. ரஸல் மனைவி ஜெஷிம் லோரா தனது இன்ஸாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றில் ரஸலுக்கு அவர் தொடர்ச்சியாக கொடுக்கும் முத்தக்காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ குறித்து கமெண்டுக்களை பதிவு செய்து வரும் ரசிகர்கள், ரஸலுக்கு பவர் கிடைத்த ரகசியம் தெரிந்துவிட்டதாக கேலியும் கிண்டலுடன் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்கலிலும் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி நீச்சலுடையில் ஜெஷிம் லோராவின் புகைப்படங்களும் பார்ப்பவர்களை சூடேற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :