புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2019 (15:59 IST)

மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற கணவன்: அதிரவைக்கும் காரணம்

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரையும், மாமியாரையும் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தேனி மாவட்டம் கோம்பை அமுல்நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44). அவரது மனைவி பழனியம்மாள் (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் குடித்துவிட்டு தனது மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.
 
மேலும் தன் மனைவியை விடாமல் படுக்கைக்கு அழைத்து டார்ச்சர் செய்துள்ளார். இதற்கு அவர் மறுக்கவே, பழனியம்மாள் வேலை செய்யும் இடத்திற்கு சென்று வேவு பார்த்துள்ளார். அங்கு பழனியம்மாள் ஒரு நபருடன் பேசுவதை பார்த்த மணிகண்டன், நீ அவனுடன் தகாத உறவியில் ஈடுபடுகிறாயா? என்று கேட்டு மனைவியை கொடுமைபடுத்தி வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் மணிகண்டன் பழனியம்மாளை வெட்டி கொன்றுள்ளார். இதனை தடுக்க சென்ற மாமியாரையும் அவர் வெட்டி கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.