செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (17:11 IST)

போலீஸார் 500 ரூபாய் கேட்டதால் பைக்கை கொளுத்திய வாலிபர்

போலீஸார் 500 ரூபாய் அபராதம் கேட்டதால் ஒரு வாலிபர் பைக்கை கொளுத்தியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் மோட்டர் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீஸார், அவரிடம் 500 ரூபாய் அபராதம் கேட்டுள்ளனர்.ஆனால் அவரிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

ஆனால் போலீஸ் அவரை விடவில்லை. கிட்டதட்ட ஒரு மணி நேரமாக போலீஸாரிடம் கெஞ்சிய அந்த வாலிபர், ஆத்திரத்தில் தனது பைக் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு அங்கிருந்து ஓடினார். இந்த செயலால் போலீஸார் மிரண்டு போயினர். இச்சமபவத்தை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.