திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (11:32 IST)

750 கோல்களை அடித்து சாதனை படைத்த ரொனால்டோ!

போர்ச்சுகல் அணியைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 750 ஆவது கோலை அடித்து சாதனை படைத்துள்ளார்.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொழில்முறை போட்டிகளில் 750 ஆவது கோலை நேற்று அடித்து சாதனை படைத்துள்ளார். இத்தாலியின் யுவன்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வரும் அவர், நேற்று நடைபெற்ற டைனமோ கீவ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் வீரர் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.