திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2017 (07:19 IST)

குழந்தையின் தாய் பெயரை முதன்முதலில் அறிவித்த கால்பந்துவீரர் ரொனால்டோ

உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. மைதானத்தில் மேஜிக் செய்து பந்தை கோலாக்குவதில் வல்லவர். இந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் 4வது குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ஒரு விசேஷம் உள்ளதாம். அது என்னவெனில் இந்த குழந்தையின் தாயின் பெயரை அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்


 


ஆம், இதற்கு முன்னர் ரொனால்டோவுக்கு பிறந்த ஒரு இரட்டை குழந்தைகள் மற்றும் ஒரு குழந்தை வாடகைத்தாய்களுக்கு பிறந்ததாகவும், அந்த வாடகைத்தாய்களைன் பெயர்களை அறிவிக்காமல் ரொனால்டோ ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ரொனால்டோவின் கேர்ள்பிரண்ட் ஜார்ஜினா, குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னரே, தன்னுடைய வயிற்றில் இருப்பது ரொனால்டோவின் குழந்தை என்பதை அறிவித்தார். இதற்கு ரொனால்டோ மறுப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் ஒப்புக்கொள்ளவும் இல்லை. இந்த நிலையில் தற்போது குழந்தை பிறந்ததும், அந்த குழந்தையின் தாய், ஜார்ஜினா தான் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த குழந்தைக்கு அலானா மார்ட்டினா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.