மாமியாருக்கு கட்டளையிட்ட மருமகன்....
நடிகை ஐஸ்வர்யாராயின் தாயாருக்கு அபிஷேக் பச்சன் புதிய கட்டளையிட்டுள்ளாராம்.
ஐஸ்வர்யாராயின் தாயார் பிருந்தா, மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கணவர் இறந்த பிரகு அங்கு தனியாகவே வசித்து வருகிறார்.
இந்த கட்டிடத்தில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் பதற்றத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது அபிஷேக் பச்சன் தனது மாமியார் பிருந்தாவிடம், இனி நீங்கள் எங்கள் வீட்டில் தான் தங்க வேண்டும். இனி தனியாக இருக்க கூடாது என கட்டளையிட்டுள்ளாராம்.
மருமகனின் கட்டளைக்கு இனங்க மாமியாரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதனால் ஐஸ்வர்யாராய் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.