வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 செப்டம்பர் 2021 (17:50 IST)

கேப்டன் ரோஹித் ஷர்மா… துணைக்கேப்டன் இவர்களில் ஒருவர் – சுனில் கவாஸ்கர் ஆருடம்!

இந்திய டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியதை அடுத்து அடுத்த கேப்டன் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

டி 20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய டி 20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுகிறார். இந்நிலையில் அடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மாதான் என உறுதியாக தெரிந்தாலும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சில ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.

அதன் படி அடுத்த இரண்டு உலகக்கோப்பைகளுக்கு ரோஹித் ஷர்மாதான் கேப்டனாக இருக்கவேண்டும். அதேபோல துணைக்கேப்டனாக ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளார்.’