செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 27 செப்டம்பர் 2021 (13:37 IST)

கோலிக்கு மெச்சூரிட்டியே இல்லை… வந்துட்டாருப்பா மைக்கேல் வாஹ்ன்!

ஆர் சி பி அணியின் கேப்டன் கோலி முதிர்ச்சி இல்லாமல் நடந்து கொள்வதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் குற்றம் சாட்டியுள்ளார்.

மைக்கேல் வாஹ்ன் கிரிக்கெட் வர்ணனையாளராக இருப்பதே கோலியை விமர்சனம் செய்யதான் போலிருக்கிறது. கோலி எது செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கும் நக்கீரராக சமீபகாலமாக அவர் இருக்கிறார். இந்நிலையில் நேற்று வலுவான மும்பை அணியை வீழ்த்திய ஆர்சிபி அணி முதிர்ச்சியற்று நடந்துகொண்டதாக வாஹ்ன் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிலும் கோலி சிக்ஸ் அடிப்பதற்கெல்லாம் முஷ்டி உயர்த்தி கொண்டாடுகிறாராம். சிக்ஸ் அடிப்பது உங்கள் வேலை அதை கொண்டாட என்ன இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கோலி இன்றில்லை நேற்றில்லை எப்போதுமே இதுபோல கொண்டாட்டமான மனநிலையிலேயே இருப்பவர்தான் என்பது அனைவரும் அறிந்ததே.