புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2017 (06:35 IST)

ஐசிசி தரவரிசை: 5வது இடத்தை பிடித்த ரோஹித் சர்மா

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளில் 296 ரன்கள் குவித்த ரோஹித் சர்மாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் தரவரிசையிலும் அவர் 9வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்



 
 
ஐசிசியின் தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியான நிலையில் அந்த பட்டியலில் 790 புள்ளிகள் பெற்ற ரோஹித் சர்மா 5வது இடத்தை பிடித்தார். ரோஹித் சர்மா 5வது இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை ஆகும்
 
மேலும் 877 புள்ளிகளுடன் விராத் கோஹ்லி முதலிடத்திலும், ரஹானே 24வது இடத்திலும், கேதர் ஜாதவ் 36 வது இடத்திலும் உள்ளனர்.
 
அதேபோல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் 7-வது இடத்தையும், யுஸ்வேந்திர சாஹல்75-வது இடத்தையும், குல்தீப் யாதவ் 80-வது இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.