புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (20:51 IST)

ரோஹித் சர்மா சதம்: இந்தியாவுக்கு 4வது வெற்றி

ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த 4 போட்டிகளில் இந்தியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு ஒரு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.



 
 
இந்த நிலையில் நாக்பூரில் இன்று நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 242 ரன்கள் எடுத்தது.
 
243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அபார வெற்றியால் 42.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 243 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 125 ரன்களும், ரஹானே 61 ரன்களும் கேப்டன் விராத் கோஹ்லி 39 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.