திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 நவம்பர் 2020 (11:19 IST)

இன்னும் 5 நாட்களே உள்ளது… ரோஹித் மற்றும் இஷாந்துக்கு எச்சரிக்கை விடுத்த ரவி சாஸ்திரி!

இந்திய அணியின் வீரர்களான ரோஹித் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தங்கள் உடல்தகுதியை நிருபிக்க இன்னும்  5 நாட்களே உள்ளதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே என சொலல்ப்பட்டது. ஆனால் அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அவர் இடம்பெற்றார். ஆனாலும் ஆஸ்திரேலியா செல்லாத அவர் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அங்கு தனது உடல்தகுதியை நிருபிக்க பயிற்சிகள் மேற்கொண்டார்.

இந்நிலையில் அவரும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் தங்கள் உடல்தகுதியை நிரூபிக்க இன்னும் 5 நாட்களே உள்ளது என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.