1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (20:14 IST)

ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம்: செஞ்சுரியை மிஸ் செய்ததால் ரசிகர்கள் சோகம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி வந்ததை அடுத்து அவர் செஞ்சுரியை மிஸ் செய்ததால் ரசிகர்கள் சோகமடைந்தனர்.
 
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச அந்த அணி முடிவு செய்தது. இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
போட்டி தொடங்கிய சில மணி நேரங்களில் மழை பாதித்ததை அடுத்து அதன் பின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 45 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது 
 
ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 83 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும் கேஎல் ராகுல் 43 ரன்கள் எடுத்துள்ளார்