வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2017 (17:38 IST)

கோஹ்லிக்கு ஓய்வு, ரோஹித்துக்கு புரமோஷன்: ஒருநாள் போட்டி அணி அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி வரும் டிசம்பர் 2ஆம் தேதி 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இதனையடுத்து டிசம்பர் 10 முதல் ஒருநாள் போட்டி தொடர் தொடங்குகிறது

இந்த நிலையில் இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டி தொடரில் கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வில் அவருடைய திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விராத்கோஹ்லிக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்கிறார். மேலும் இந்திய அணியில் ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாகல், பும்ரா, புவனேஸ்வர் குமார், சிதார்த் ஆகியோகளும் இடம்பிடித்துள்ளனர்.