திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (17:56 IST)

தவறான ஷாட்டை தேர்ந்தெடுத்த ரோகித் சர்மா

ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 45 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்துள்ளது.

 
ஆசிய கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்றைய போட்டியில் ஹாங்காங் - இந்தியா அணிகள் விளையாடி வருகிறது. இந்திய அணிக்கு ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டி இது.
 
இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது. தவான், சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா 23 ரன்கள் குவித்த போது இஹ்சான் கான் பந்துவீச்சை மைதானத்தை விட்டு வெளியேறினார்.
 
இந்திய அணி 45 ரன்களுக்கு தற்போது 1 விக்கெட் இழந்துள்ளது. இதையடுத்து தற்போடு அமபதி ராயுடு களமிறங்கியுள்ளார். சுழல் பந்தை சிக்ஸர் அனுப்ப முயற்சி செய்து தவறான ஷாட் ஆடியதால் ரோகித் சர்மா கேட்ச் ஆகி வெளியேறினார்.