புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (08:27 IST)

சிஎஸ்கே அணிக்கு மாறுகிறார் ராபின் உத்தப்பா: ஷேன் வாட்சன் இடத்தை நிரப்புவாரா?

சிஎஸ்கே அணிக்கு மாறுகிறார் ராபின் உத்தப்பா
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு விளையாட உள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது
 
கடந்த ஆண்டு ரூபாய் மூன்று கோடிக்கு ராஜஸ்தான் அணி ராபின் உத்தப்பாவை ஏலம் எடுத்தது. இருப்பினும் அவர் தொடக்க ஆட்டக்காரர் உள்பட பல்வேறு நிலைகளில் விளையாடியும் மொத்தம் 196 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பதும் ஒரு அரைசதமோ, சதமோ கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷேன் வாட்சன் ஓய்வு பெற்று இருப்பதால் அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ராபின் உத்தப்பா தருமாறு சிஎஸ்கே கேட்டுக் கொண்டது 
 
இந்த வேண்டுகோளை அடுத்து ராபின் உத்தப்பாவை ராயல் ராஜஸ்தான் அணி விடுவித்துள்ளது. எனவே சிஎஸ்கே அணியில் இந்த ஆண்டு ராபின் உத்தப்பா விளையாடுவார் என்பது குறிப்பிடதக்கது 

இதுகுறித்து ராயல் ராஜஸ்தான் அணியின் நிர்வாகி ஒருவர் கூறும்போது ’இதுவரை எங்கள் அணியில் விளையாடிய ராபின் உத்தப்பாவிற்கு நன்றி. எங்கள் அணியில் ஏற்கனவே சில தொடக்க ஆட்டக்காரர்கள் இருப்பதால் சிஎஸ்கே கேட்டுக்கொண்டதற்கிணங்க ராபின் உத்தப்பாவை வழங்கியுள்ளோம். சிஎஸ்கே அணியில் ராபின் உத்தப்பா சிறப்பாக விளையாட எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்
 
இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறியபோது ’ராயல் ராஜஸ்தான் அணியில் நான் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். இப்போது எனக்கு சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளதால் னது உற்சாகம் மேலும் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்