திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (14:36 IST)

ஹிட் லிஸ்டில் ரெய்னா, ஜாதவ்.. ஆனா தோனி மனசு வெச்சா..? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான அணி வீரர்கள் தேர்வு நடைபெறும் நிலையில் சிஎஸ்கே அணியில் கேதர் ஜாதவ், சுரேஷ் ரெய்னா நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் அணிகளில் வீரர்களை நீக்குவது, சேர்ப்பது உள்ளிட்டவற்றுக்கான மினி ஏலத்தை பிசிசிஐ பிப்ரவரி 11ல் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணி தனது அணியை வலிமைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கேவிலிருந்து நீக்கப்பட உள்ள வீரர்கள் பெயரில் ப்யூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், முரளி விஜய் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் இடம்பெற்ற நிலையில் தான் அணியில் இல்லை என ஹர்பஜன் சிங் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சீசனில் விளையாடாமல் சென்ற சுரேஷ் ரெய்னா, போட்டியில் இருந்தும் சரியாக விளையாடாத கேதர் ஜாதவ் உள்ளிட்டோரையும் நீக்க சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்த இறுதி முடிவை தோனி கைகளிலேயே அளிக்க சிஎஸ்கே முடிவெடுத்துள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் தோனி மனது வைத்தால் இவர்கள் அணியில் நீடிப்பார்கள் என கூறப்படுகிறது.