செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 2 ஜூலை 2022 (09:25 IST)

ரிஷப் பண்ட் அபார சதம், ஜடேஜா அதிரடி: இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்!

Rishap
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் நேற்று இந்தியா தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான கில் மற்றும் புஜாரே சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். அதேபோல் விஹாரி மற்றும் விராட் கோலியும் ஏமாற்றிய நிலையில் ரிஷப் பண்ட் மிக அபாரமாக விளையாடி 114 பந்துகளில் 146 ரன்கள் எடுத்தார். இதில் 19 பவுடர்கள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
மேலும் ஜடேஜா 83 ரன்கள் எடுத்து இன்னும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒரு கட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் என்று தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் ரிஷப் மற்றும் ஜடேஜாவின் அபாரமான ஆட்டத்தால் இந்தியாவின் ஸ்கோர் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது