1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India corona daily cases register 2 thousand

17 ஆயிரத்தில் தொடர்ந்து நீடிக்கும் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

India Corona Crisis
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்து வந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 17,092 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,34,86,326 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,25,168 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,28,51,590 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,09,568 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
ஈரான், சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்! 3 பேர் பலி! – அதிர்ச்சியில் மக்கள்!