திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (11:18 IST)

அஸ்வினை எடுக்காமல் விட்டது இந்திய அணியின் மிகப்பெரிய தவறு: ரிக்கி பாண்டிங்

Ricky Ponting
அஸ்வினை எடுக்காமல் விட்டது இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறு என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 
 
அஸ்வினை அணியில் எடுக்காமல் விட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ் தகுந்தார் போல் பவுலிங் அட்டாக் மட்டுமே தேர்வு செய்து இந்தியா தவறு செய்துள்ளது என்றும் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் வரிசையில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஜடேஜாவை விட டெஸ்டில் அஸ்வின் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருந்திருப்பார் என்றும் இந்தியா அஸ்வினை எடுக்காமல் விட்டுள்ளது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
 
 டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் வீரராக இருக்கும் அஸ்வினை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்காதது மிகப்பெரிய தவறு என ஏற்கனவே பல வீரர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran