செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (16:04 IST)

நம்ம பசங்க கூடயே இன்னைக்கு மோத வேண்டி இருக்கு…. RCB வெளியிட்ட செம்ம புகைப்படங்கள்!

இன்றைய ஐபிஎல் போட்டியில் RCB மற்றும் RR ஆகிய அணிகள் மோதுகின்றன.

டு பிளஸ்சி தலைமையில் இந்த ஆண்டு ஆர் சி பி அணி ஐபிஎல் தொடரை விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. இதையடுத்து இன்று மூன்றாவது போட்டியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடும் தேவ்தத் படிக்கல், சஹால் மற்றும் சைனி ஆகிய மூவரும் முன்பு ஆர் சி பி அணிக்காக விளையாடியவர்கள். அதைக் குறிப்புட்டு ‘இன்றைய மோதலில் நமக்கு தெரிந்த முகங்கள் சிலவற்றோடு மோத வேண்டியுள்ளது’ எனக் கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.