செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (22:44 IST)

ஐபிஎல்-2020; கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-வது போட்டியான இன்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதின.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி மோசமான ஸ்கோரைப் பதிவு செய்தது.

20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு  84 ரன்கள் எடுத்து, பெங்களூர் அணிக்கு 86 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இலகுவாக இலக்கை எட்டிப் பிடிக்க பேட்டிங் செய்த பெங்களூர் அணி 13 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.