0-0 என டிக்ளேர் செய்த இரண்டு அணிகள்: கிரிக்கெட்டில் ஒரு புதுமை

Last Modified ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (20:04 IST)
கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இரண்டு அணிகளும் ஒரு இன்னிங்ஸை விளையாடாமல் டிக்ளேர் செய்த புதுமை நியூசிலாந்து நாட்டின் உள்ளூர் போட்டி ஒன்றில் நடந்துள்ளது.

நியூசிலாந்து நாட்டில் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் - கான்டர்பரி அணிகள் இடையே நான்கு நாள் போட்டி ஒன்று நடந்தது. இதில்
கான்டர்பரி அணி டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்ததால் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சின் முதல் நாளில் 301 ரன்கள் குவித்தது.

ஆனால் 2வது மற்றும் 3வது நாள் மழை பெய்ததால் கடைசி நாளில் மிண்டும் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் தொடர்ந்து விளையாடி 352 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது.


இதனையடுத்து பேட்டிங் செய்ய வேண்டிய கான்டர்பரி அணி பேட்டிங் செய்யாமலே 0-0 என்ற வகையில் டிக்ளேர் செய்தது. இதை சிறிதும் எதிர்பார்க்காத சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் தனது இரண்டாவது இன்னிங்ஸை 0-0 என்று டிக்ளேர் செய்தது. இரண்டு அணிகளும் அடுத்தடுத்து 0-0 என டிக்ளேர் செய்ததால் கான்டர்பரி அணி வெற்றி பெற 353 ரன்கள் என்ற இலக்கு ஏற்பட்டது. ஆனால் கான்டர்பரி அணி 131 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்கள் எடுத்து தத்தளித்தது. இருப்பினும் வில்லியம்ஸ்ம், ஹசல்டின் ஜோடி இறுதி வரை தாக்குப்பிடித்து ஆடினாலும் கடைசி ஓவரில் ஹசல்டின் ஆட்டமிழந்ததால் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் வெற்றி பெற்றது.


இதில் மேலும் படிக்கவும் :