திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 மே 2021 (09:02 IST)

அந்த மகிழ்ச்சியான செய்தியை தோனிதான் கூறினார்… ரெய்னா நெகிழ்ச்சி!

ஐபிஎல் தொடரில் கட்டுக்கோப்பாக எல்லா சீசன்களிலும் விளையாடிய வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னாதான்.

சிஎஸ்கே அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா, எல்லா சீசன்களிலும் 400 ரன்களுக்கு மேல் அடித்த வீர்ர. ஆனால் கடந்த துபாயில் நடந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் அணி நிர்வாகத்தோடு ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் தொடரில் கலந்துகொள்ளாமல் இந்தியா திரும்பினார். சிஎஸ்கே அணியும் மிக மோசமான தோல்வியைப் பெற்றது. அதன் பின்னர் இந்த ஆண்டு அணியில் மீண்டும் இணைந்தார்.

இந்நிலையில் தற்போது தான் எழுதி வரும் பிலீவ் என்ற தன்வாழ்க்கை வரலாற்று நூலில் ஐபிஎல் முதல் சீசனில் சென்னை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டது குறித்து கூறியுள்ளார். அதில் ‘எல்லா வீரர்களைப் போலவும் நானும் என்னை எந்த அணி ஏலத்தில் எடுக்கப்போகிறது என்பதில் ஆர்வமாக இருநந்தேன். என்னை சென்னை அணி ஏலத்தில் எடுத்திருப்பதை தோனிதான் எனக்கு தெரிவித்தார். மேலும் என் ஆட்டத்தைக் காண ஆவலாக இருப்பதாகக் கூறினார். அந்த தொடரில் ஹெய்டன், பிளமிங் , முரளிதரன் ஆகிய லெஜண்ட்களுடன் விளையாடியது மறக்க முடியாத அனுபவம்’ எனக் கூறியுள்ளார்.