ரெய்னாவை சச்சினின் மகன் என்று நினைத்த விமானப் பணிப்பெண்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா இப்போது தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை எழுதி வருகிறார். அவ்வப்போது அதில் இருந்து சில பகுதிகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது ஒரு விமானப்பணிப் பெண் ஒருவர் தன்னை சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் என தவறாக புரிந்துகொண்டதைப் பற்றி கூறியுள்ளார்.
சச்சினோடு விமானத்தில் பயணம் செய்யும்போது அங்கே அவரிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த பெண் ஒருவர் தன்னை அர்ஜுன் என நினைத்துக் கொண்டு ஹார் அர்ஜுன் எப்படி இருக்கிறாய். உன் அம்மா எப்படி இருக்கிறார்? எனக் கேட்க நான் அர்ஜுன் இல்லை என சொல்வதற்குள் சச்சின் அர்ஜுன் நன்றாக இருக்கிறான். ஆனால் அவன் சரியாக படிப்பதில்லை என அவனின் அம்மா கவலைப்படுகிறார் என சீண்டினார். ஆனால் அதன் பின்னர் அவர் நான் ரெய்னா என்பதை தெரிந்துகொண்டார்.