மழையால் சீக்கிரமே முடிந்த முதல்நாள் ஆட்டம் !

Last Modified சனி, 19 அக்டோபர் 2019 (16:16 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் 32 ஓவர்கள் மீதியிருக்கும்போதே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா டி 20 தொடரை சமன் செய்துள்ளது. அடுத்ததாக நடந்த டெஸ்ட் தொடரில் முதலில் நடந்த 2 டெஸ்ட்களையும் தோற்று தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் இன்று மூன்றவாது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் மயங்க் அகர்வால் (10), புஜாரா (0), கோஹ்லி (12) என அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றமளிக்க இந்தியா 39 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த ரஹானே பொறுப்புடன் விளையாடி அணியை நிலை நிறுத்தினர். விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடிய இருவரும்  ரன்ரேட்டையும் வேகமாக உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா சிக்ஸ் அடித்து தனது 6 சதத்தைப் பூர்த்தி செய்தார். மறுமுனையில் ரஹானே சிறப்பாக விளையாடி சதத்தை நெருங்கையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தாலும் மழையாலும் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதையடுத்து இப்போது கடுமையான மழை பெய்து வருவதால் இனிமேல் இன்றைக்கு ஆட்டம் தொடர வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :