சொதப்பும் இந்தியா!; ஆரம்பமே முக்கிய புள்ளிகள் அவுட்! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

cricket
Prasanth Karthick| Last Updated: சனி, 19 அக்டோபர் 2019 (13:23 IST)
ராஞ்சியில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் தொடரில் இந்தியாவின் சுமாரான ஆட்டம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. மூன்று டெஸ்ட்டுகளில் இரண்டில் வெற்றி பெற்று விட்டதால் இந்தியாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மூன்றாவது டெஸ்ட்டிலும் வெற்றிபெற்று தென் ஆப்பிரிக்க அணியை இந்தியா ஒயிட்வாஷ் செய்யும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் டாஸ் வென்று பேட்டிங் இறங்கிய இந்தியா மிகவும் சுமாரான ஆட்டத்தையே தந்துவருகிறது. தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் 10 ரன்களில் அவுட் ஆக, புஜாரா ஒரு ரன் கூட அடிக்காமல் வெளியேறினார். கேப்டன் வீராட் கோலியும் 12 ரன்களில் அவுட் ஆனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி உறுதியாகிவிட்டதால் இப்படி சுமாராக விளையாடுவதாக சிலர் கொதித்து போய் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும் நின்று நிதானமாக விளையாட இந்திய அணிக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :