சச்சினை விட சிறந்த வீரரா டிராவிட்?

Rahul Dravid
Last Updated: திங்கள், 2 ஜூலை 2018 (20:04 IST)
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் இடமளித்து ஐசிசி கௌரவித்துள்ளது.

 
ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் இடமளித்து கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் ராகுல் டிராவிட் பெயர் இடம்பெற்றுள்ளது.
 
ஐசிசி ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்ற 5வது வீரர் என்ற பெருமையை ராகுல் டிராவிட் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிங் பாண்டிங்கும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
 
ஆனால் சச்சின் பெயர் அறிவிக்கப்படவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த சச்சின் பெயர் பட்டியலில் இடம்பெறாதது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆனால் வீரர்கள் ஓய்வு பெற்ற 5 வருடத்துக்கு பின்னர்தான் இந்த பட்டியலில் இடம்பெற முடியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்த ஆண்டு சச்சின் பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ராகுல்  டிராவிட்டும் இந்த பட்டியலில் இடம்பெற தகுதியான வீரர்தான் என்றாலும் சச்சின் பெயர் இடம்பெறாதது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :