1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (18:05 IST)

30 லட்சம் பத்தாது: அதிருப்தி தெரிவித்த டிராவிட்!

நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டவருக்கான ஐசிசி உலககோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் இந்திய அணி 4 முறை ஜூனியர் உலககோப்பையை வென்றுள்ளது. 
 
ஜூனியர் உலககோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது. பயிற்சியாளர் டிராவிட்டுக்கு ரூ.50 லட்சமும், அவருக்கு உதவியாக இருந்தவர்களுக்கு ரூ.20 லட்சமும் அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், மும்பை திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது டிராவிட், இளம் வீரர்களுக்கு ரூ.30 லட்சம் போதாது, அனைவரும் ஒரே மாதிரியான பரிசு தொகையை அறிவித்து இருக்க வேண்டும் என்று அதிருப்தி தெரிவித்தார். 
 
தனக்கு உதவியாக இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோரெபி உடல் இயக்க நிபுனர் மற்றும் மேலும் 2 பேருக்கு ரூ.20 லட்சம் அறிவித்துவிட்டு தனக்கு மட்டும் ரூ.50 லட்சம் வழங்குவது சரியல்ல என்றும் கூறியுள்ளாராம்.