செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2018 (15:39 IST)

உலக கோப்பை பெற்றுக்கொடுத்த டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் பரிசு

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 12வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றதை பிசிசிஐ பரிசு தொகை அறிவித்துள்ளது.

 
12வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர் முடிவில் 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி நான்காவது முறையாக உலக கோப்பையை வென்றது. 
 
ஜூனியர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இந்தியாவின் தூண் என்று அழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய டிராவிட் இன்று இந்தியாவை சர்வதேச அளவில் அசைக்க முடியாத அணியாக மாற்றியுள்ளார். 
 
இந்நிலையில் பிசிசிஐ தலைமை பயிற்சியாளர், அணி வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கு பரிசு தொகை அறிவித்துள்ளது. ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம், அணி வீரர்களுக்கு தலா 30 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய அணி மற்றும் அதன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.