1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 23 ஜூலை 2014 (11:59 IST)

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பட்டியலில் முன்னேறிய முரளி விஜய், ரஹானே

லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு இந்திய வீரர்கள் சிலரின் தரவரிசையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முரளி விஜய், அஜின்கிய ரஹானே 11 இடங்கள் முன்னேறியுள்ளனர்.
7/74 என்று அசத்திய இஷாந்த் சர்மா 3 இடங்கள் முன்னேறி டாப்-20-ல் நுழைந்தார். அவர் தற்போது பந்து வீச்சுத் தரவரிசையில் 20வது இடத்தில் உள்ளார். இந்தியப் பவுலர்களைப் பொறுத்தவரை முன்னணியில் இருப்பது ரவிச்சந்திரன் அஸ்வின், இவர் 11வது இடத்தில் உள்ளார்.
 
அற்புதமாக பந்து வீசிய புவனேஷ் குமார் 12 இடங்கள் முன்னேறி பவுலிங் தரநிலையில் 34வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரவீந்திர ஜடேஜா 28வது இடத்தில் உள்ளார்.
 
டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முரளி விஜய் 11 இடங்கள் முன்னேறி 19வது இடத்திற்கு முன்னேறினார். லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் அற்புதமாக ஆடி சதம் அடித்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்த அஜின்கியா ரஹானே 11 இடங்கள் முன்னேறி 35வது இடத்தில் உள்ளார். புஜாரா 8வது இடத்திலும் கோலி 14வது இடத்திலும் உள்ளனர்.
 
டேல் ஸ்டெய்ன் நீண்ட காலமாக முதலிடத்தை பிடித்து வைத்துள்ளார். இங்கிலாந்துக்கு ஒரு ஆறுதலான விஷயம் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 இடங்கள் முன்னேறி 8வது இடத்தில் உள்ளார் என்பதே. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.