செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 மார்ச் 2018 (12:47 IST)

விற்பனைக்கு வருகிறது அமெரிக்க அதிபரின் நிர்வாண சிலை!

அமெரிக்காவை சேர்ந்த ஜுலியன் என்ற நிறுவனம் அதிபர் டிரம்பின் நிர்வாண சிலையை ஏலம் விட போவதாக அறிவித்துள்ளது.
 
உலகின் அதிக சக்தி வாய்ந்த அமெரிக்க அதிபர் பதவியில் இருப்பவர் டொனால்ட் டிரம்ப். இவர் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவரது நிர்வாண சிலை ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த சிற்பி ஒருவர் அவரது கை வண்ணத்தால் உருவாக்கினார்.
 
இந்த சிற்பம் அவர் அதிபராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு உருவாக்கப்பட்டு, மக்களின் பார்வைக்காக நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் 2016-ஆம் ஆண்டு வைக்கப்பட்டிருந்து.
 
தற்போது இந்த சிலையை ஜுலீயன் நிறுவனம் ஏலம் விட முடிவு செய்து, வரும் மே 2-ஆம் தேதி சிலையை ஏலம் விடுகிறது. இதனை மக்கள் அதிகம் தொகை கொடுத்து வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.