திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (06:47 IST)

புரோ கபடி: அணிகளின் நிலை என்ன?

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் புரோகபடி போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அணிகளின் புள்ளி விபரப்பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம்



 
 
இதுவரை 77 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் 'ஏ' அணியில் ஹரியானாவும், 'பி' அணியில் பெங்கால் வாரியர்ஸ் அணியும் முதலிடத்தில் உள்ளன.
 
ஏ அணிகளின் விபரம்
 
49 புள்ளிகள் பெற்று ஹரியானா முதலிடத்திலும் 46 புள்ளிகள் பெற்று குஜராத் 2வது இடத்திலும் 39 புள்ளிகள் பெற்று மும்பை 3வது இடத்திலும், 37 புள்ளிகள் பெற்று புனே 4வது இடத்திலும், 31 புள்ளிகள் பெற்று ஜெய்ப்பூர் 5 வது இடத்திலும், 28புள்ளிகள் பெற்று டெல்லி அணி கடைசி இடத்திலும் உள்ளது.
 
'பி' அணிகளின் விபரம்
 
50 புள்ளிகள் பெற்று பெங்கால் முதலிடத்திலும், 37 புள்ளிகள் பெற்று உபி 2வது இடத்திலும், 36 புள்ளிகள் பெற்று பாட்னா 3வது இடத்திலும், 30 புள்ளிகள் பெற்று தெலுங்கு டைட்டான் அணி 4வது இடத்திலும், 39 புள்ளிகள் பெற்று பெங்களூர் அணி 5வது இடத்திலும், 21 புள்ளிகள் பெற்று தமிழ் தலைவாஸ் அணி கடைசி இடத்திலும் உள்ளது