ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 ஜூன் 2024 (08:14 IST)

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பெற்ற நிலையில் நாடே அந்த வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் இந்திய அணிக்கு எவ்வளவு பரிசு கிடைத்தது என்பதை தற்போது பார்ப்போம். 
 
2024 ஆம் ஆண்டின் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 20 கோடியே 25 லட்ச ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. அதேபோல் தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்கா 10 கோடியே 25 லட்சம் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
 
 இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அணிகளுக்கு மற்றும் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட மொத்த பரிசு தொகை ரூபாய் 93 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் அந்த தொடரில் மொத்தம் 65 கோடி பரிசளிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 93 கோடி பரிசளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 2007 ஆம் ஆண்டு உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடங்கிய போது 49 கோடி தான் மொத்த பரிசு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva