சர்கார் 100: ரெடியாகும் தியேட்டர்கள்; தளபதி ரசிகர்கள் ஃபுல் ஸ்விங்...

Last Updated: சனி, 9 பிப்ரவரி 2019 (19:43 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உட்பட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் சர்கார். 
 
இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் வந்து பின்னர் ஒருவழியாக தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் 100வது நாள் விழாவை ரசிகர்கள் கொண்டாட உள்ளனர். 
 
ஏற்கனவே சர்கார் 75 நாள் கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாப்பட்டது. இப்போது ரசிகர்கள் இந்த படத்தின் 100வது நாள் விழாவை கொண்டாட ஈரோடு மாவட்டத்தில் பிரபல தியேட்டரில் வரும் 17 ஆம் தேதி காலை 7 மணிக்கு சர்கார் மீண்டும் திரையிடப்பட்டு கொண்டாடப்படவுள்ளதாம். 
 
மேலும் சென்னையில் வெற்றி திரையரங்கும் சர்கார் 100 வது கொண்டாட்டத்தை கொண்டாட முடிவு செய்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :