இங்கிலாந்து கோப்பையை வெல்லவில்லையே ! – சேவாக்கின் பழைய டிவிட்டை தோண்டியெடுத்த பிரபலம் !

Last Modified புதன், 17 ஜூலை 2019 (12:20 IST)
இங்கிலாந்து அணிக் கோப்பையை வென்றுள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சேவாக் இங்கிலாந்து இன்னும் கோப்பையை வெல்லவில்லையா எனக் கூறிய டிவிட்டை பியர்ஸ் மோகன் குறிப்பிட்டு கேலி செய்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தொலைக்காட்சி பிரபலம் பியர்ஸ் மோர்கன் இந்தியாவில் 120 கோடி பேரும் இரண்டு உலகக்கோப்பைகளை  மட்டுமேக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் எனக் கூறி கேலி செய்தார். இதற்குப் பதிலளித்த சேவாக் ‘ ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இன்னும் கோப்பையை வெல்லவில்லையே’ எனக் கூறினார்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து கோப்பையை வென்றுள்ள நிலையில் அந்த டிவிட்டை குறிப்பிட்டு மோர்கன் ‘ஹாய் நண்பா’ எனக் கூறி கேலி செய்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :