செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 ஜூலை 2019 (10:42 IST)

தோற்றாலும் நம்பர் 1 –ல் கோஹ்லி ! – இங்கிலாந்து முதலிடம் !

உலகக் கோப்பையை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறினாலும் கோஹ்லி இன்னமும் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையை அறிவித்துள்ளது. இதில் உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி 125 புள்ளிகளோடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் இருந்த இந்தியா 122 புள்ளிகளோடு இரண்டாம் இடத்துக்கு பின் தங்கியுள்ளது. நியூசிலாந்து (112), ஆஸ்திரேலியா (111), தென்னாப்பிரிக்கா (110) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

அதுபோல பேட்ஸ்மேன்களின் பட்டியலில் விராட் கோலி (886)  முதல் இடத்திலும் ரோஹித் ஷர்மா 885 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். பாபர் அசாம், டூ ப்ளஸிஸ், ரோஸ் டெய்லர், கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர்  ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

பந்துவீச்சில் பூம்ரா 809 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். டிரெண்ட் போல்ட் , ரபாடா, பேட் கம்மின்ஸ் ஆகியோர் அடுத்த இடத்தில் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஷகிப் அல் ஹசன் முதல் இடத்தில் உள்ளார்.