புதன், 18 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2024 (12:58 IST)

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 261 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுனில் நரைன் 32 பந்துகளில் 71 ரன்களும் பிலிப் சால்ட் 37 பந்துகளில் 75 ரன்களும் சேர்த்தனர்.

அதன் பின்னர் ஆடிய பஞ்சாப் அணி கொல்கத்தாவை விட ஒரு படி அதிக அதிரடியோடு ஆடி 261 ரன்கள் என்ற சாதனை இலக்கை எட்டிப்பிடித்து வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. பஞ்சாப் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதம் ஒரு முக்கியக் காரணியாக அமைந்தது.

இந்த போட்டி முடிந்த பின்னர் பேசிய கே கே ஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “ இந்த போட்டியில் இரு அணிகளின் பேட்டிங்கும் அட்டகாசமாக இருந்தது. இந்த போட்டியில் தவறு எங்கு நடந்தது என்பதை ஆலோசித்து அடுத்த போட்டியில் சரி செய்யவேண்டும். இந்த பிட்ச்சை புரிந்துகொண்டு புதிய ஐடியாவோடு அடுத்த போட்டியில் விளையாடவேண்டும்” எனக் கூறியுள்ளார்.