1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 டிசம்பர் 2021 (08:59 IST)

3 போட்டிகளையும் மொத்தமாக வென்றது பாகிஸ்தான்: மே.இ.தீவுகள் பரிதாபம்!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து முதல் கட்டமாக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ஏற்கனவே முதல் 2 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து நேற்று கராச்சியில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது
 
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிக்கோலஸ் பூரன் மிக அபாரமாக விளையாடி 64 ரன்கள் அடித்தார் 
 
இந்த நிலையில் 208 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் பேட்டிங் செய்தபோது தொடக்க ஆட்டக்காரர்களான முஹம்மது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் ஆசாம் ஆகிய இருவரும் மிக அபாரமாக விளையாடினார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 208 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளிலும் முழு வெற்றியை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 18ஆம் தேதி அதாவது நாளை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது