வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 15 டிசம்பர் 2021 (08:07 IST)

ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய ஷாஹின் அஃப்ரீடி: தொடரை வென்றது பாகிஸ்தான்!

ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய ஷாஹின் அஃப்ரீடி: தொடரை வென்றது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரீடி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது என்பது குறிபிடத்தக்கது. கராச்சியில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது. முஹம்மது ரிஸ்வான் 38 ரன்கள் எடுத்தார்.இதனை அடுத்து 173 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 163 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டியில் பாகிஸ்தானை நட்சத்திர பந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரீடி ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தியது பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது