அமித்ஷாவுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை செய்த முதல்வர் பழனிச்சாமி!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியிருப்பதாகவும், இதுவரை அமிஷாவுடன் நடைபெற்ற சந்திப்பில் இது தான் நீண்ட நேர சந்திப்பு என்றும் தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான இந்த சந்திப்பின்போது சட்டம்-ஒழுங்கு விவகாரம், இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் டெல்லியில் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘இந்தியாவில் அகதிகளாய் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் குடியுரிமை சீர்திருத்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.