1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (07:43 IST)

டிராவில் முடிந்தது 2வது டெஸ்ட் போட்டி: ஆனாலும் பாகிஸ்தானுக்கு கிடைத்த ஆறுதல்

டிராவில் முடிந்தது 2வது டெஸ்ட் போட்டி:
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே செளதாம்படன் நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது
 
கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்த போட்டி மழை காரணமாக ஒரு நாள் கூட முழுமையாக நடைபெறவில்லை என்பதும் ஒரு இன்னிங்ஸ் கூட முழுமையாக முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக ஆட்டம் விட்டுவிட்டு நடந்ததால் இந்த ரன்களை எடுக்க பாகிஸ்தான் அணிக்கு 4 நாட்கள் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 43.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. போட்டி டிராவில் முடிந்தாலும் பாகிஸ்தானுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பாகிஸ்தான் அணியின் முஹம்மது ரிஸ்வான் ஆட்டநாயகன் விருது பெற்றார். இவர் தனது முதல் இன்னிங்சில் 72 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டி டிராவில் முடிந்தததை அடுத்து இங்கிலாந்து அணி தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது என்பதும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 21ஆம் தேதி இதே செளதாம்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது