1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (07:46 IST)

3 நாள் முடிந்தும் ஒரு இன்னிங்ஸ் கூட முடியவில்லை: டிராவை நோக்கி பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட்

டிராவை நோக்கி பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது 
 
கடந்த 13ம் தேதி ஆரம்பித்த இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதலாவது நாளில் பாகிஸ்தான் அணி 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்த போது திடீரென மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது அதன் பின்னர் மழை காரணமாக ஆட்டம் தொடரவில்லை 
 
இதனை அடுத்து இரண்டாவது நாளில் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது 
 
இதனையடுத்து நேற்று மூன்றாவது நாளில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் மூன்றாவது நாள் ஆட்டமும் தடைபட்டது. இதனை அடுத்து மூன்று நாட்கள் முடிவடைந்தும் ஒரு இன்னிங்சில் பாதி கூட இன்னும் முடிவடையாததால் இந்த போட்டியில் டிராவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் இரண்டு நாள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் இந்த போட்டி முடிவு தெரிய வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
பாகிஸ்தான் அணியின் அபித் அலி மற்றும் முகம்மது ரிஸ்வான் தலா 60 ரன்களும், பாபர் அசாம் 47 ரன்களும் எடுத்துள்ளனர் என்பதும், இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் மற்றும் பிராடு தலா 3 விக்கெட்டுகளையும் கர்ரன் மற்றும் வோக்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் என்பதும் ஒரு விக்கெட் ரன் அவுட் என்பதும் குறிப்பிடத்தக்கது