திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (08:48 IST)

தோனி இப்படி ஓய்வு பெற்றது சரியல்ல – முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெற்றவிதம் சரியல்ல என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஸ்மாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இதையடுத்து பலரும் அவருடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு ஓய்வுக்கு பின்னான வாழ்க்கைக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதுகுறித்து முன்னாள் விளையாட்டு வீரர்கள் பலரும் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான இன்ஸமாம் உல் ஹக் ‘தோனி இப்படி வீட்டில் இருந்த படி ஓய்வு முடிவை அறிவித்திருக்க கூடாது. அவருக்கு இத்தனைக் கோடி ரசிகர்கள் இருக்கும்போது அவர் மைதானத்தில் ஓய்வை அறிவித்திருக்க வேண்டும். நான் முன்பு சச்சினிடமும் இதைதன் சொன்னேன்’ எனக் கூறியுள்ளார்.