வியாழன், 5 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Updated : வியாழன், 15 ஜூன் 2017 (10:07 IST)

ஃபைனலுக்கு சென்றது பாகிஸ்தான்: முதல் தோல்வியில் மூட்டையை கட்டிய இங்கிலாந்து

ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் முக்கிய போட்டியான அரையிறுதி போட்டி இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின



 


லீக் போட்டியில் தோல்வியே பெறாத இங்கிலாந்து அணி இந்த போட்டியை நம்பிக்கையுடன் சந்தித்த நிலையில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியின் அதிசயமான அபார பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் காரணமாக இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் 212 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு தகுதி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் 37.1 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி பெற்ற முதல் தோல்வியால் போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஹசன் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.