திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2019 (11:35 IST)

அவர்களை மின்னல் தாக்கினால்தான் உண்டு – முகமது யூசுப் கிண்டல் !

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதிப்பெற வேண்டுமானால் எதிரணி வீரர்களை மின்னல் தாக்கினால்தான் உண்டு என பாக் முன்னாள் கேப்டன் முகமது யூசுப் கேல் செய்துள்ளார்.

உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரெலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதிப்பெற்று விட்டன. நியுசிலாந்து அணியும் கிட்டத்தட்ட தகுதிப் பெற்று விட்டது. ஆனால் இன்று பாகிஸ்தான் பங்களாதேஷ் அணியை 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ரன்ரேட் அடிப்படையில் நியுசிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்கு முன்னேறலாம்.

ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது யூசுப் அந்நாட்டு ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் ‘எவ்வளவுதான் கத்துக்குட்டி அணியாக இருந்தாலும் 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற இயலாது. எதிரணியினரை மின்னல் தாக்கவேண்டும் என வேண்டினால்தான் உண்டு’ எனத் தெரிவித்துள்ளார்.