பாகிஸ்தான் வீரர்களுக்கு பிரியாணி, பீட்ஸா & பர்கர் கட் – மிஸ்பா உல் ஹக் அதிரடி !

vinothkumar| Last Modified செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (13:13 IST)
பாகிஸ்தான் வீரர்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு சில உணவுகளை நீக்க உத்தரவிட்டுள்ளார் தலைமைப் பயிற்சியாளர்.

பாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகவும் தேர்வுக்குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் பாக் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக். இந்நிலையில் அவர் அணிக்கு சில் அதிரடி உத்தரவுகளை விதித்துள்ளார். அவற்றுள் மிக முக்கிய வீரர்கள் அனைவரும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க பிரியாணி,எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், பர்கர், பீட்ஸா மற்றும் ஸ்வீட் ஆகிய பொருட்களை சாப்பிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பைப் போட்டிக்கு முந்தைய நாள் பாகிஸ்தான் வீரர்கள் பீட்ஸா போன்ற உணவுகளை சாப்பிட்டதும் போட்டியின் போது பாக் கேப்டன் சர்பராஸ் கான் கொட்டாவி விட்டதும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அதனால் இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கலாம்.இதில் மேலும் படிக்கவும் :