செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (10:33 IST)

லேண்டர் விக்ரமை அதிகம் எதிர்நோக்கும் பாகிஸ்தானியர்! காரணம் என்ன?

இந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள்தான் லேண்டர் விக்ரம் குறித்து கூகுளில் அதிகம் தேடிப்பார்த்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், ப்ரக்யான் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பை இழந்தது. 
 
இதன் பின்னர் ஆர்பிட்டர் மூலம் லேண்டர் விக்ரம் சேதமின்றி பத்திரமாக இருப்பதாக தகவலை தெரிந்துக்கொண்டது. ஆனால், லேண்டர் விக்ரமுடன் தொடர்ப்புக்கொள்ள இயலவில்லை என இஸ்ரோ அறிவித்தது. 
அதன் பின்னர் நாசா, இஸ்ரோவுடன் இணைந்து லேண்டர் விக்ரமுடன் தொடர்ப்பை எற்படுத்த முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நாசா லேண்டர் விக்ரமின் புகைப்படத்தை  வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இதனோடு வெளியாகியுள்ள சிறப்பு செய்தி என்னெவெனில், இந்தியர்களை போல பாகிஸ்தானியர்களும் லேண்டர் விக்ரம் குறித்து கூகுளில் தேடியுள்ளனர். இதில் சுவாரஸ்யம் என்னவெனில், இந்தியர்களை விட பாகிஸ்தானியகளே லேண்டர் விகரம் குறித்து அதிகம் தேடி பார்த்துள்ளனர். 
லேண்டர் விக்ரம் தனது தொடர்பை இழந்த போது பாகிஸ்தான் #IndiaFails என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கியது. ஒருவேளை இந்தியாவை அவமானப்படுத்த லேண்டர் குறித்த தகவலை தேடியதா என தெரியவில்லை.