திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 அக்டோபர் 2020 (17:01 IST)

ரொனால்டோ சாதனையை முறியடித்த நெய்மார் – இன்னும் பீலே மட்டும்தான் பாக்கி!

பிரேசில் அணியைச் சேர்ந்த நெய்மார் தனது அணிக்காக அதிக கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் பிரேசில் அணிக்காக விளையாடி வருகிறார் நெய்மார். இதுவரை 103 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 64 கோல்களை அடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக நடந்த உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் பெரூ அணிக்கு விளையாடிய போது ஹாட்ரிக் கோல் அடித்தார். அதன் மூலம் பிரேசில் அணிக்காக 62 கோல்களை அடித்த ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்.

இவருக்கு கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே மட்டுமே உள்ளார். அவர் பிரேசிலுக்காக 77 கோல்களை அடித்துள்ளார். அந்த சாதனையையும் நெய்மார் விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.